வெலிகமயில் நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக விடி வெள்ளி பத்திரிகை ஆசிரியர்
சகோதரர் எம்.ஏ. ஹபீபுர் ரஹ்மான் தொகுத்த 'சூரதுல் கஹ்ப் உணர்த்தும் உண்மைகள்', 'அல்ஹாஜ் எம்.எச்.அப்துல் கப்பார்' ஆகிய இரு நூல்கள் இதன்போது வெளியிடப்பட்டன.
கிந்தோட்டை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தென்னிலங்கை முஸ்லிம்கள் சமகாலத்தில் எதிர்கொண்டுள்ள சவால்கள், அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் இதன் ஒரு பகுதியாக இப் பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்களை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் நிகழ்வில் உரையாற்றினேன். வெலிகமயில் கொள்கை, பிரதேச ரீதியான வேறுபாடுகளுக்கப்பால் பொது நோக்கில் ஒன்றிணைந்து பணியாற்ற அனைவரும் முன்வர வேண்டும் என்றும் இதன்போது அழைப்பு விடுத்தேன்.
இந்நிகழ்வில் தென்னிலங்கை இஸ்லாமிய செயலகம், காலி கோட்டை மென்சன் நூதனசாலை ஆகியவற்றை நிறுவியதுடன் பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றி இன்று 80 வயதுகளை கடந்து நிற்கும் அப்துல் கப்பார் ஹாஜியாரின் பணிகளை பாராட்டி, அவருக்காக பிரார்த்தித்தும் உரையாற்றினேன்.
விடிவெள்ளியின் அபிமானிகள் பலரையும் சந்திக்கக் கிடைத்தது. நான் 'வரலாற்றில் ஓர் ஏடு' புகழ் காத்தான்குடி எம்.எச்.எம். புஹாரி மௌலவியின் புதல்வர் என நிகழ்வில் சொல்லப்பட்டதையடுத்து பலரும் வந்து "நாங்கள் உங்கள் வாப்பாவின் ரசிகர்கள். விடிவெள்ளி ஆசிரியரான நீங்கள் அவரது மகன் என்று இன்றுதான் அறிந்தோம். இரட்டிப்பு சந்தோசம்" என்று கூறிச் சென்றார்கள்.
நண்பர்களான Siaaf Muhammedh Afras Mohamed மற்றும் விடிவெள்ளி வாசகரும் எழுத்தாளருமான ஹிபிஷி தௌபீக்கும் தமது வீடுகளுக்கு அழைத்துச் சென்று உபசரித்தார்கள். சியாப் தனது இரு நூல்களைப் பரிசளித்தார்.
என்னை விட வேறு முக்கியஸ்தர்களை அதிதிகளாக போடலாமே என்று நான் சொன்ன போது " இல்லை. இப் பகுதியில் உங்கள் பத்திரிகையை நிறையப் பேர் வாசிக்கிறார்கள். ஆனால் உங்களைப் பற்றி அவர்களுக்கு அறிமுகமில்லை. இந்த நிகழ்வின் ஊடாக உங்களை அறிமுகப்படுத்த விரும்புகிறேன் " என்று சொன்ன நூலாசிரியர் சகோதரர் ஹபீபுர் ரஹ்மானின் அன்புக்கும் நன்றிகள்.
பயணத்தில் தோள் கொடுத்த தம்பி Muhammadh Izzath இற்கும் நன்றிகள்.


No comments:
Post a Comment