தலைப்புச் செய்திகள்...

தலைப்புச் செய்திகள்...

உள்ளூர் செய்திகள்

வௌியூர் செய்திகள்

இந்தியச் செய்திகள்

Saturday, September 23, 2017


திருகோணமலையில் நிலவும் காணிப்பிரட்சனைகளுக்கு விரைவில் தீர்வு-        அமைச்சர் கயந்த கருணாதிலக 


பல வருடங்களாக திருகோணமலையில் நிலவும் காணிப்பிரட்சனைகளுக்கான  நிரந்தர தீர்வை விரைவில்  பெற்றுத்தருவதாக காணி மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக உறுதியளித்துள்ளார்.
 திருகோணமலையில் நிலவும் காணி பிரட்சனைகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் திருகோணமலை ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபுக்கும் அமைச்சர் கயந்த கருனாதிலக்கவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று அண்மையில்  அமைச்சரின் அலுவலகத்தில்  நடைபெற்றது.
பல வருடங்களாக குடியிருக்கும் காணிகளுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படாமை , பொதுமக்களின் விவசாயக் காணிகளில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது வன பரிபாலன சபையினால் விதிக்கப்படும் கட்டுபாடுகள், வியாபார நோக்கங்களுக்காக பொதுமக்களின் தனியார் காணிகளை  அரசியல்வாதிகளின் உதவியுடன் கைப்பற்றல், முப்படையினரின் கட்டுபாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவித்தல் அல்லது அவர்களுக்கு மாற்று காணிகள் வழங்குதல் போன்ற பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இப்பிரட்சனைகளை ஆராய்ந்து தீர்க்கக்கூடிய பிரட்சனைகளுக்காண நிரந்தர தீர்வுகளை பெற்று தருவதாகவும் முப்படையினரின் கட்டுபாட்டில் உள்ள தனியார் காணிகளின் பிரட்சனைகள் தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவுடன் ஆலோசனை செய்வதாகவும் இதன்போது அமைச்சர் உறுதியளித்தார்.

 திருகோணமலையில் நிலவும் இப்பிரட்சனைகள்  தொடர்பாக நேரடியாக ஆராய்ந்து இது தொடர்பாக  அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அரச அதிகாரிகளுடனும் கலந்துரையாட  விரைவில் திருகோணமலைக்கு விஜயம் செய்வதாகவும் இதன்போது  அமைச்சர் உறுதியளித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

கருத்துரையிடுக வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Related News

No comments:

Post a Comment

இஸ்லாமிய சிந்தனை

தொழில்நுட்பம்

கட்டுரைகள்

மருத்துவப் பகுதி