தலைப்புச் செய்திகள்...

தலைப்புச் செய்திகள்...

உள்ளூர் செய்திகள்

வௌியூர் செய்திகள்

இந்தியச் செய்திகள்

Tuesday, August 15, 2017


இனவாதம் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது- இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் காட்டம்


இனவாதம் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது- இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் காட்டம்



இனவாதத்தை பரப்பி சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகளைத் தூண்டி விடுவதன் மூலம் அரசியல் அதிகாரத்தை ஒருபோதும் கைப்பற்ற முடியாது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
30 வருட கால பயங்கரவாத யுத்தம் நாட்டின் நிலையான சமதானத்தை சீர்குலைத்தது. யுத்தம் நிறைவடைந்த பின்னரும் அது சரியான முறையில் நிலைநாட்டப்படவில்லை. அதற்கான முயற்சிகள் இன்று வரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறான சூழலில், இனவாதம் சமூக வலைத்தளங்கள் ஊடாக மிக மோசமான முறையில் பரப்புரை செய்யப்பட்டு வருகின்றன. இதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள் - சட்டதிட்டங்கள் எம்மத்தியில் இல்லாமல் இருக்கின்றன.
இந்நிலையில், இனவாதத்தை பரப்பி சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதன் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற சிலர் முயற்சி செய்து வருகின்றனர். கிழக்கு மாகாணத்திலும் இந்நிலை உருவாகியுள்ளமை மிகவும் கவலைக்குரியதாகும்.
தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதன் ஊடாக தமது அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்ள சிலர் முனைகின்றனர். தேங்காய் பூவும் பிட்டும் போல் இருந்த தமிழ் - முஸ்லிம் மக்களிடையே தற்போது பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சீர் செய்து பழைய நிலைக்கு இரு சமூகங்களுக்கிடையிலான உறவை கொண்டு செல்வதற்கு சமூக தலைவர்கள், அரசியல்வாதிகளுக்கு பாரிய பொறுப்புள்ளது.

யுத்தத்துக்கு பின்னர் தமிழ் - சிங்கள மக்களிடையேயான உறவை மேம்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் அரசால் முன்னெடுக்கப்பட்டன. எனினும், போரால் விரிசலடைந்த தமிழ் - முஸ்லிம் மக்களிடையிலான உறவை பலப்படுத்துவதற்கான முயற்சிகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை. – என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

கருத்துரையிடுக வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Related News

No comments:

Post a Comment

இஸ்லாமிய சிந்தனை

தொழில்நுட்பம்

கட்டுரைகள்

மருத்துவப் பகுதி